FLASH NEWS



ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது . But exemption will be granted to persons whose appointment process initiated prior to NCTE Notification dated 23 August 2010 .

Sunday, May 26, 2013

பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.


சென்னை : பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
வரும், 28ம்தேதி, மாவட்டங்களுக்குள், பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடக்கிறது. மறுநாள், 29ம்தேதி, மாவட்டத்தில் இருந்து,வேறு மாவட்டங்களுக்கு, பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடக்கும்
 

Saturday, May 25, 2013

196 தாவரவியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 27-ல் பணி நியமன கலந்தாய்வு

First Published : 25 May 2013 02:40 AM IST
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்வு செய்யப்பட்ட தாவரவியல் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 196 பேருக்கு திங்கள்கிழமை (மே 27) பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட 310 இளநிலை உதவியாளர்களுக்கும் ஆன்-லைன் மூலம் திங்கள்கிழமை பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பு ஆசிரியர்களின் பதிவுதாரர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Read More
தஞ்சாவூர்
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பு ஆசிரியர்களின் பதிவுதாரர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
பதிவுதாரர்கள் பட்டியல் வெளியீடு
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கலைச்செல்வன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

ஆசிரியர் தகுதித் தேர்வு, தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழிகாட்டுதலுக்கு விரோத மானது

தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆந்திராவில் உயர்ஜாதியினருக்கு 60, பிற்படுத்தப் பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 மதிப்பெண்கள் என்றும் அஸ்ஸாமில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55, ஒரிசாவில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப் பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,

பி.லிட் முடித்த தமிழாசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்க மறுப்பு


சிவகங்கை, மே 25:
பள்ளிக் கல்வித்துறை கட்டுப் பாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பி.லிட் முடித்தவர்களுக்கு தமிழாசிரியர் பணியிடம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு எம்.ஏ பட்டம் பெற்றால் அவர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, பி.எட் முடித்த தமிழாசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் அளிக்கப்படுகிறது. 

Thursday, May 23, 2013

ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் டி.இ.டி., தேர்வுகள்: டி.ஆர்.பி., அறிவிப்பு

சென்னை: "ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. மூன்றாவது முறையாக நடக்கும் இத்தேர்வை, ஏழு லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் எழுதுவர் என, எதிர்பார்ப்பதால், 15 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து வினியோகிக்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் குறைப்பு இல்லை : தமிழக அரசு கைவிரிப்பு

டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்' என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியபோதும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது.
டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.

பல மாநிலங்களில் சலுகை : அதன்படி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் அளவு, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 22, 2013

ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

சென்னை
ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதித்தேர்வு
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. ஏறத்தாழ 6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில் 10397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர்.
இந்த தகுதித்தேர்வு மூலம், காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தகுதியானவர்கள் கிடைக்காததால் சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. எனவே, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.


Tuesday, May 21, 2013

ஆங்கில வழி வகுப்புகள்:விரைவில் டிஆர்பி மூலம் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

ஆங்கில வழி வகுப்புகள்: அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்க
வேண்டும் என பெரும்பாலான பெற்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதைப்
பரிசீலித்த அரசு, இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில்
ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளைத் துவக்க உத்தரவிட்டுள்ளது. அந்தந்த
மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில்,எந்தெந்தப் பள்ளியில் ஆங்கில வழிக்
கல்வி வகுப்பு துவக்க பெற்றோர்கள் தரப்பில் விருப்பம்
தெரிவிக்கப்படுகிறதோ, அந்தப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்
கல்வி கற்பிக்கும் வகையில் ஒரு வகுப்பு துவக்கப்படும்.
 அதேசமயம், அந்தப் பள்ளிகளிலும் 6ஆம்வகுப்பில் தமிழ் வழிக் கல்வி
வகுப்பும் தொடர்ந்து இருக்கும். ஆங்கில வழிக் கல்வி பாடங்களை
நடத்துவதற்கு போதுமான தகுதியான ஆசிரியர்கள் பெரும்பாலான பள்ளிகளில்
ஏற்கெனவே பணியில் இருக்கின்றனர்.  ஏதாவது சில பள்ளிகளில் ஆங்கில வழிக்
கல்வி போதிக்க ஆசிரியர்கள் தேவைப்பட்டால்,அதற்கான ஆசிரியர்களை நியமிக்க
பள்ளிக் கல்வித் துறை தயாராக இருக்கிறது. மேலும், விரைவில் டிஆர்பி மூலம்
புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தகுதி இல்லாதவர்கள் நியமனம் சிறப்பு ஆசிரியர்களால் கல்வி அழிகிறது



புதுடெல்லி, மே 21:
ஆரம்ப பள்ளிகளில் மாநில அரசுகள், போதிய கல்வி தகுதி இல்லாத சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு இடங்கள்

கடந்த டிசம்பரில், 2,300க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை. தற்@பாது, இதில், பொருளியல், வணிகவியல், வரலாறு ஆகிய பாடங்களில், 120 இடங்களை நிரப்ப, வரும், 23, 24 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம் மற்றும் நெல்லை ஆகிய ஏழு இடங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கு, 3,200 பேர் அழைக்கப்பட்டு உள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
Read More

தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.

சென்னை : அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 900 பேர் புதிய இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி துறையில், பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது.

32 மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலகங்களில், 'ஆன்லைன்' மூலம் நடந்தது. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று காலை, மாவட்டத்திற்குள்ளே பணி இட மாறுதல் பெறுவதற்கும், பிற்பகல், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு செல்பவருக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், 390 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்கு உள்ளேயும், 510 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேயும் புதிய இடங்களை தேர்வு செய்துள்ளனர். புதிய இடத்திற்கான மாறுதல் உத்தரவு உடனடியாக வழங்கப்பட்டது.
Read More

Sunday, May 19, 2013

பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு, நாளை (20ம் தேதி) முதல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில் நடக்கிறது.

பட்டதாரி அறிவியல், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், 8,000 காலி பணியிடங்கள் உள்ளன. கணிதம், தமிழ்ப் பாடங்களில், எந்த மாவட்டத்திலும், காலி பணியிடங்களே கிடையாது என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தென் மாவட்டங்களுக்குத் தான் ஆசிரியர்கள் அதிக அளவில் பணி மாறுதல் கேட்கின்றனர். ஆனால், அங்கு மிக சொற்ப இடங்களே காலியாக உள்ளன.

Friday, May 17, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வும்..சலசலப்புகளும்


:
மே 16, 2013  at   10:22:18 AM

வழக்கமாக மாணவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த தேர்வுக் காய்ச்சலை ஆசிரியர்களுக்கும் விரிவாக்கியது அதிமுக அரசு முதல்முறையாக நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தகுதித் தேர்வு ஏற்படுத்திய சலசலப்புகள் என்னென்ன?

ஆசிரியைகள் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்படுகின்றனர். இந்த இடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்

திருநெல்வேலி:பணி நிரவல் என்ற பெயரில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் பணி நிரவல் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. உபரியாக கணக்கிடப்படும் ஆசிரிய, ஆசிரியைகள் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்படுகின்றனர். இந்த இடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

Sign In